பதிவு செய்த நாள்
23
டிச
2019
12:12
திருத்தணி : கே.ஜி.கண்டிகை, சாய் நகரில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில், வரும், 31ம் தேதி, படித் திருவிழாவையொட்டி, மூலவருக்கு, காலை, 8:00 மணி முதல், மதியம், 12:00 மணி வரை, தொடர்ந்து பாலாபிஷேகம் நடக்கிறது.
அதை தொடர்ந்து, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. மாலை, 6:00 மணி முதல், மறுநாள் காலை, 6:00 மணி வரை, இரவு முழுவதும், பஜனை குழுவினரின் பக்தி பாடல்கள் மற்றும் சாய்ராம் நாம கீர்த்தனைகள் பாடப்படுகின்றன.நள்ளிரவு, 12:01 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது.ஜன., 1ம் தேதி, ஆங்கில புத்தாண்டு சிறப்பு தரிசனம் நடைபெற உள்ளது. விழாவையொட்டி, கோவில் நிர்வாகம், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து வருகிறது.