பதிவு செய்த நாள்
23
டிச
2019
12:12
போளிவாக்கம் : போளிவாக்கம் சத்திரம் கிராமத்தில், ஒன்பது குண்டங்கள் அமைக்கப்பட்டு காயத்ரி மகா யாகம் நேற்று நடந்தது.
கடம்பத்துார் ஒன்றியம், போளிவாக்கம் ஊராட்சிக்குட்பட்டது போளிவாக்கம் சத்திரம். மணவாள நகர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த கிராமத்தில், உலக அமைதிக்காகவும், சமுதாய மேம்பாட்டிற்காகவும், மாணவர்கள், இளைஞர்கள் நல்ல முன்னேறம் பெறவும், ஆண்டுதோறும், போளிவாக்கம் சத்திரம் கிராமத்தில் காயத்ரி மகா யாகம் நடந்து வருகிறது.
இந்த ஆண்டு, 10வது ஆண்டாக, இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில், நேற்று, ஒன்பது குண்டங்கள் அமைக்கப்பட்டு, காயத்ரி மகா யாகம் நடந்தது.காலை, 10:00 மணி முதல், 12:30 மணிக்கு, ஒன்பது குண்டங்கள் அமைக்கப்பட்டு, காயத்ரி மகா யாகம் நடந்தது.இதில், போளிவாக்கம் சத்திரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று, தங்கள் கைகளாலேயே யாகம் செய்தனர். மேலும், தொடர்ந்து யாகம் நிறைவடைந்தவுடன், மதியம், 1:00 மணிக்கு சமபந்தி போஜனமும் நடந்தது.