பதிவு செய்த நாள்
23
டிச
2019
12:12
அன்னுார்: அன்னுார், ஐயப்ப சுவாமி கோவில் பொன் விழாவில், கேரள கலை வடிவங்களை உணர்த்தும் படி வேடமிட்டு, பக்தர்கள் வீதியுலாவில் பங்கேற்றனர்.
அன்னுார் ஐயப்பன் சுவாமி கோவில் மற்றும் நஞ்சுண்ட விநாயகர் கோவிலில், 50வது ஆண்டு விழா, கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 20ம் தேதி மூன்றாம் கால ேஹாமமும், வதம்பை மணியன் குழுவின் பட்டிமன்றமும் நடந்தன.நேற்று முன்தினம் ஐயப்பனுக்கு, பால், பன்னீர் உள்ளிட்ட, 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. மதியம் மகா தீபாராதனை நடந்தது. காலையில் துவங்கி, மாலை வரை 4,000 பேருக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது.நேற்று மதியம் 3:00 மணிக்கு, குதிரை, செண்டை மேளம், கேரள கலா ரூபம், கேரள பூ காவடி, ஜமாப் இசை மற்றும் ஐயப்ப பக்தர்களின் பஜனையுடன், புலி வாகனத்தில், சுவாமி திருவீதியுலா கோவிலில் துவங்கியது.முக்கிய வீதிகள் வழியாக சென்றது. வாணவேடிக்கை நடந்தது. வீதிகளில், பக்தர்கள், நீர் ஊற்றி, பிரசாதம் அளித்து வரவேற்பு கொடுத்தனர். ஊர்வலத்தில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.