பதிவு செய்த நாள்
23
டிச
2019
12:12
திருப்புத்துார்: வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு பகல்பத்து, ராப்பத்து உற்சவம் டிச.,27 முதல் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் துவங்குகிறது. இங்கு 21 நாட்கள் வரை வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும்.
டிச.,27 அன்று மாலை ஆண்டாள் சன்னதிக்கு, பெருமாள் எழுந்தருள்வார். அங்கு காப்பு கட்டி, பகல் பத்து உற்சவம் துவங்கும். தொடர்ந்து யாகசாலை பூஜைகள் துவங்கி 10 நாட்கள் நடைபெறும். தினமும் காலை பெருமாள் ஆண்டாள் சன்னதி எழுந்தருளிஆழ்வாருக்கு மங்களாசனம் நடைபெறும். ஜன.,5ல் பகல் பத்தாம் நாளன்று திருமங்கையாழ்வாருக்கு திருவடித் தொழுதல் நடந்து மோட்சம் அளிக்கப்படும். மறுநாள் ஜன.,6ல் காலையில் பெருமாள் பள்ளி கொண்ட அலங்காரத்தில் சயனக் கோலத்தில் அருள்பாலிப்பார்.அன்று இரவு 8:00 மணிக்கு ராஜ அலங்காரத்தில் எழுந்தருள்வார். இரவு 11:00 மணிக்கு சுவாமி, அம்பாள் தங்கப்பல்லக்கில், பரமபதவாசல் கடந்து செல்வர். தொடர்ந்து 10 நாட்களுக்கு ராப்பத்து உற்சவம் நடக்கும். மாலை பெருமாள் பரமபதவாசல் திறக்கப்பட்டு எழுந்தருள்வார். ராப்பத்தாம் நாளில் நம்மாழ்வார் திருவடி தொழுதலுடன் உற்ஸவம் நிறைவடையும்.