பதிவு செய்த நாள்
24
டிச
2019 
01:12
 
 சென்னை : லஸ்யா கலாசார மையம் சார்பில் நடந்து வரும், ’துரைப்பாக்கத்தில் திருவையாறு’ என்ற நிகழ்ச்சி, 30ம் தேதி நிறைவு பெறுகிறது. 
ரமணியம் லட்சுமி நினைவு அறக்கட்டளையின், லஸ்யா கலாசார மையம் சார்பில், ’துரைப் பாக்கத்தில் திருவையாறு’ என்ற லஸ்யா மார்கழி உற்சவம், மூன்று ஆண்டுகளாக நடத்தப் பட்டு வருகிறது. இந்த ஆண்டு,’லஸ்யா மார்கழி உற்சவம் -- 2019’ துரைப்பாக்கத்தில் உள்ள, ஏ.பி.எல்., குளோபல் பள்ளி வளாகத்தில் உள்ள ஜானகியம்மாள் அரங்கில், 16ம் தேதி துவங்கியது. வரும், 30ம் தேதி வரை நடக்கிறது.தினமும் மாலை, 6:30 மணி முதல், 8:30 மணி வரை கர்நாடக சங்கீதம், நடனம், நாடகம் ஆகியவை நடந்து வருகிறது. இன்று மாலை, ஸ்மிதா மாதவின் நடன நிகழ்ச்சி நடக்கிறது. 
நாளை  25ம் தேதி, மாலை, கலைமாமணி சூர்ய பிரகாஷ் கர்நாடக சங்கீத கச்சேரி நடக்க உள்ளது. வரும், 26ம் தேதி, கிரிஜா ஹரிகரனின் பாரதியார் பாடல்கள் நிகழ்ச்சியும்; 27ம் தேதி கிரேஸி மோகன் குழுவின், ’கிரேசி பிரீமியர் லீக்’ என்ற நாடகம் நடைபெற உள்ளது.வரும், 28ல், டி.வி.சங்கர நாராயணன்; 29ம் தேதி, ஓ.எஸ்.அருணினின் கர்நாடக சங்கீத நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நிறைவு நாளான, 30ம் தேதி, வரிஜாஸ்ரீ வேணுகோபாலின், புல்லாங்குழல் மற்றும் வாய்ப்பாட்டு நிகழ்ச்சியும் நடக்க உள்ளது.