பதிவு செய்த நாள்
26
டிச
2019
03:12
விழுப்புரம்: அனுமன் ஜெயந்தியை யொட்டி, விழுப்புரம் ஆஞ்சநேய சுவாமி தங்கக்கவச அலங் காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.விழாவையொட்டி நேற்று 25ம் தேதி காலை 6:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 7:00 மணிக்கு அலங்கரிக் கப்பட்ட சுவாமிக்கு தங்கக்கவசம் சாற்றப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 7:00 மணிக்கு உற்சவ சுவாமி வீதியுலா நடந்தது.
ஏற்பாடுகளை, ஆலய அறங்காவலர் குமார், செயல் அலுவலர் ஜெயகுமார் செய்திருந்தனர். இதேபோன்று, விழுப்புரம், வண்டிமேட்டில் உள்ள ஸ்ரீ அபிநவ மந்த்ராலயத்தில், உள்ள ஆஞ்ச நேய சுவாமி அனுமன் ஜெயந்தியை யொட்டி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.வாணியம்பாளையம் கிராமத்தில் உள்ள சஞ்சீவிராயன் கோவிலில் நேற்று 25ம் தேதி மாலை 3.00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அலங்கார திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, 3.30 மணிக்கு சுதர்சன ஹோமம், 4.00 மணிக்கு திருமஞ்சனம் நடந்தது. இதையடுத்து, கோவில் உட்பிரகாரத்தில் ஆஞ்சநேயர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
* திண்டிவனம்: ராஜாங்குளக்கரையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில், நேற்று 25 ல், காலை சுவாமி க்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டு, தீபாராதனை நடந்தது. விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் திண்டிவனம் லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவிலிலும், அனுமன் ஜெயந்தி விழா நடந்தது.
* செஞ்சிசெஞ்சிக்கோட்டை வீர ஆஞ்சநேயர் கோவிலில் சுவாமிக்கு விசேஷ அபிஷேகமும், அரச இலையில் அலங்காரமும் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். இதே போன்று, திருவத்திமலையில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடாஜலபதி கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் வழிபாடு நடந்தது. வடை மாலை சாற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
* சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் மற்றும் காரியமங்கலம் கருணா சாயி பாபா கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மகா தீபாராதனை நடந்தது.விக்கிரவாண்டிவிக்கிரவாண்டி டோல் பிளாசா அருகே உள்ள வீற்றிருக்கும் வீர ஆஞ்சநேயர் கோவிலில் காலை 7:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வெண்ணைய்க் காப்பு அலங்காரம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.