வைகுண்ட ஏகாதசி விழா : லட்டு தயாரிக்கும் பணி தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29டிச 2025 10:12
பெருமாநல்லூர்; வைகுண்ட ஏகாதசியன்று பெருமாநல்லூர் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆண்டு தோறும் திருப்பூர் மகா விஷ்ணு சேவா சங்கம் சார்பில், லட்டு வழங்கப்பட்டு வருகிறது. 16 வது ஆண்டாக இந்த வருடமும் பக்தர்களுக்கு லட்டு வழங்க முடிவு செய்து, கடந்த இரண்டு நாட்களாக பெருமாநல்லூர் ஆதிகேசவ பெருமாள் கோவில் வளாகத்தில் வளாகத்தில் லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணியில் 300 பேர் 35 ஆயிரம் லட்டு தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பெருமாநல்லூர் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு 15 ஆயிரம் லட்டும் வழங்கப்படுகிறது. மீது முள்ள லட்டுகளை திருமுருகன்பூண்டி கரிவரதராஜ பெருமாள், சேவூர் லட்சுமி நரசிம்ம பெருமாள், கணக்கம் பாளையம் உலகளந்த பெருமாள் மற்றும் வரதராஜ பெருமாள், கோபி பிரசன்ன வெங்கடேச பெருமாள், சிவன் மலை சீனிவாச பெருமாள், ஊத்துக்குளி பத்மநாத பெருமாள் மற்றும் வரதராஜ பெருமாள் ஆகிய கோவில்களுக்கு வரும் வழங்கப்படும். என அமைப்பின் தலைவர் தீபா, செயலாளர் தனபால் தெரிவித்தனர்.