Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சூரிய கிரகணத்துக்கு பின் ... ஈங்கூர் தம்பிராட்டி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா தொடக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 டிச
2019
12:12

சேலம்: பெருமாள் கோவில்களில், திருநெடுந்தாண்டகத்துடன் வைகுண்ட ஏகாதசி பெருவிழா தொடங்கியது. சேலம், அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி பெருவிழா, திருநெடுந்தாண்டகத்துடன் நேற்று தொடங்கியது. அதற்காக மூலவர், உற்சவர், ஆழ்வார், ஆச்சாரியார் திருமேனிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.


மாலையில், திருமங்கை மன்னன் அருளிச்செய்த திருநெடுந்தாண்டகம் என்ற பாசுரத்தை, பிரபந்த கோஷ்டியார்கள், பாராயணம் செய்து, வைகுண்ட ஏகாதசி திரு விழாவை முறைப்படி தொடங்கிவைத்தனர். இதையொட்டி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுந்தரராஜர் ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். இன்று முதல், பகல்பத்து உற்சவம் தொடங்கவுள்ளது. ஜன., 5ல் நாச்சியார் திருக்கோலம் எனும் மோகினி அலங்காரத்தில் பெருமாள் தரிசனம் அளிப்பார். மறுநாள் காலை, 5:00 மணிக்கு, சொர்க்கவாசல் திறப்பு நடக்கும். அன்றிரவு முதல், ராப்பத்து உற்சவம் தொடங்கி, 10 நாள் நடக்கும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும், உற்சவதாரர்கள் செய்து வருகின்றனர். இதேபோல், சேலம், பட்டைக்கோவில் வரதராஜ பெருமாள், உத்தம சோழபுரம் அழகிரிநாத பெருமாள் கோவில்களில், வைகுண்ட ஏகாதசி பெருவிழா தொடங்கியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 
temple news
காரமடை: யுகாதி பண்டிகை முன்னிட்டு காரமடை ரங்கநாதர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar