பதிவு செய்த நாள்
30
டிச
2019
04:12
திருநீர்மலை: திருநீர்மலை, ரங்கநாத பெருமாள் கோவிலில், பகல்பத்து, இராப்பத்து உற்சவம் துவங்கியது.
திருநீர்மலையில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. திருமங்கையாழ்வார் மற்றும் பூதத்தாழ்வார் ஆகியோரால் பாடல் பெற்ற இக்கோவிலில், நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என, நான்கு கோலங்களில், பெருமாள் அருள்பாலிக்கிறார். பிரசித்தி பெற்ற இக்கோவிலில் பகல் பத்து நிகழ்ச்சியில் கோயில் உள்வளாகத்தில் ரங்கநாதர் புறப்பாடு நடந்தது. ஜன., 5ம் தேதி வரை பகல்பத்து; ஜன., 6ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழாவை தொடர்ந்து, இராப்பத்து நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. பக்தர்களின் வசதிக்காக, கோவில் நிர்வாகம் சார்பில், பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.