செஞ்சி : மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் அறங்காவலர் குழு தேர்தல் நடந்தது. மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் மீனவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அறங்காவ லர்களாக இருந்து வருகின்றனர். மேல்மலையனுார் கோவிலில் பூசாரிகளாக உள்ள மீனவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய அறங்காவலர்களை தேர்வு செய்கின்றனர்.இந்தமுறை அறங்காவலர்களுக்கான தேர்தல் கடந்த மாதம் 18ம் தேதி துவங்கியது. 23 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். இதில் செல்வம், சரவணன், சந்தானம் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். ஒரு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மீதமுள்ள 19 மனுக்களில் 9 பேர் மனுக்களை வாபஸ் பெற்ற நிலையில் 10 பேர் போட்டியி ட்டனர்.இதற்கான தேர்தல் நேற்று 30ம் தேதி காலை 9:00 மணிக்கு துவங்கி மாலை 5:00 மணி வரை நடந்தது. மொத்தமுள்ள 546 ஓட்டுகளில் 528 ஓட்டுகள்பதிவானது.விழுப்புரம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி தேர்தல் அலுவலராக தேர்தலை நடத்தினார்.
தேர்தல் ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் ராமு தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் ஓட்டு எண்ணும் பணி நடந்தது. இதில் அறங்காவலர்களாக செந்தில்குமார், தேவராஜ், ராமலிங்கம், வடிவேல் ஆகியோர் வெற்றி பெற்றனர்.தேர்தலை முன்னிட்டு செஞ்சி டி.எஸ்.பி., நீதிராஜ் மேற்பார்வை யில் வளத்தி போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.