பழநியில் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் 17 வது ஆண்டு விளக்கு பூஜை நடந்தது. கேரள ஆகம விதிமுறைப்படி தர்ம சாஸ்தாவிற்கு வாழைமரம் கொண்டு கோயில் அமைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. காலை 4:30க்கு கணபதி ஹோமம், 5:00 மணிக்கு தீபாராதனை, 7:00 க்கு சக்ஷ்ரநாம அர்ச்சனை, பஜனை, பகல் 12:30க்கு உச்சிக்கால பூஜை நடந்தன. மாலை 5:30 மணிக்கு பட்டத்து விநாயகர் கோயிலில் இருந்து தாலப்பொழியுடன் ஐயப்பன் அலங்காரம் செய்து பெண்கள் விளக்கேந்தி யானை மேல் அய்யப்பன் பவனி வந்தார். இரவு முழுவதும் பேட்டைத்துள்ளல், ஐயப்பன் பாட்டுகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை பழநி ஐயப்ப சேவா நிர்வாகிகள் செய்தனர்.