பகல் பத்து: மோகினி அலங்காரத்தில் ஸ்ரீரங்கம் நம்பெருமாள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜன 2020 02:01
ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் கோயிலில், வைகுண்ட ஏகாதசிபெருவிழா பகல் பத்து 10ம் நாள் மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மார்கழி மாத பாவை நோன்பு 20 - ம் நாளான இன்று பரமபத நாதர் சன்னதியில் உள்ள கண்ணாடி அறையில் நப்பின்னை திருக்கல்யாணம் என்று தொடங்கும் திருப்பாவையின் 20-ம் பாசுரத்திற்கு ஏற்ப கண்ணன் ஏழு ரிஷபங்களை அடக்கி நப்பின்னையை மணத்தல் காட்சி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.