பதிவு செய்த நாள்
25
ஏப்
2012
11:04
உளுந்தூர்பேட்டை: இருந்தை புனித சூசையப்பர் ஆலயத்தில் பெரு விழா துவங்கியது. உளுந்தூர்பேட்டை தாலுகா இருந்தையில் உள்ள புனித சூசையப்பர் ஆலயத்தில் 118ம் ஆண்டு பெரு விழாவையொட்டி நேற்று முன்தினம் மாலை 7 மணிக்கு கொடியேற்றப்பட்டது.
விழுப்புரம் மறைவட்ட முதன்மை குரு பிலோமின்தாஸ் தலைமை தாங்கி கொடியேற்றி வைத் தார். தொடர்ந்து வரும் 30ம் தேதி வரை திருப்பலி, மறையுரை நிகழ்ச்சிகள் தினந்தோறும் மாலை 6 மணியளவில் நடக்கிறது. நேற்று மாலை 6 மணிக்கு செங்காடு பங்குத்தந்தை ஹென்றி எழில்மாறன் தலைமையில் திருப்பலி நடந்தது. இன்று கவசம் இயக்குனர் பிச்சை, 26ம் தேதி சத்தியமங்களம் பங்குத்தந்தை நாயகம், 27ம் தேதி மாதம்பட்டு பங்குத்தந்தை ஜெகஜீவன், 28ம் தேதி அணையேரி பங்குத்தந்தை எட்வர்ட்பிரான்சிஸ், 29ம் தேதி மாரனோடை பங்குத்தந்தை பாப்புராஜ்அந்தோணி, 30ம் தேதி உளுத்தூர் பங்குத்தந்தை மகிமைதாஸ் ஒளி தலைமையில் திருப்பலி, மறையுரை நடக்கிறது.
வரும் 1ம் தேதி காலை 6.30 மணிக்கு செஞ்சி மறைவட்ட முதன்மை குரு அருள்தாஸ் தலைமையில் பங்குத்தந்தை திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு திருவிழா கூட்டு பாடற் திருப்பலி நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு 10 மணிக்கு தேவநற்கருணை ஆராதனை, இரவு 10.30 மணிக்கு ஆடம்பர தேர்பவனி நடக்கிறது. மறுநாள் காலை 6.30 மணிக்கு கொடி இறக்கம் நடக்கிறது.
ஏற்பாடுகளை இருந்தை பங்குதந்தை அருள்தாஸ் தலைமையில் முக்கியஸ்தர்கள் திருத்துவநாதன், ராஜா, சகாயநாதன், அருளப்பன், அந்தோணிசாமி, நாதர், ஆரோக்கியதாஸ், ஆரோக்கியசாமி, நாயகம், அந்தோணிநாதன் செய்து வருகின்றனர்.