விழுப்புரம் : வைகுண்ட ஏகாதசியையொட்டி, பெரும்பாக்கம் வேங்கட வரதராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.அதனையொட்டி நேற்று காலை 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் கோவில் உட்பிரகாரத்தை வலம் வரும் நிகழ்ச்சியும், 7:00 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது. இதில், பெரும்பாக்கம், காணை மற்றும் விழுப்புரம் பகுதியை சேர்ந்த பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.