Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆனைமலை மாசாணியம்மன் கோவில் ... கோவை ராம்நகர் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தில் 75ம் ஆண்டு மகோத்சவம் துவக்கம் கோவை ராம்நகர் ஸ்ரீ ஐயப்பன் பூஜா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் பகல் பத்து 5ம் நாள்; சிவப்பு நிற பட்டு, வைரக்கல் ரங்கூன் அட்டிகை அணிந்து நம்பெருமாள் சேவை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கம் பகல் பத்து 5ம் நாள்; சிவப்பு நிற பட்டு, வைரக்கல் ரங்கூன் அட்டிகை அணிந்து நம்பெருமாள் சேவை

பதிவு செய்த நாள்

24 டிச
2025
10:12

திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஐந்தாம் நாளான இன்று  நம்பெருமாள் சிவப்பு நிற பட்டு, வைரக்கல் ரங்கூன் அட்டிகை அணிந்து பக்தர்களுக்கு காட்சியாளி்ததார். பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.


108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றி வணங்கப்படுவதுமான ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் ஆலயத்தின் முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி எனப்படும் பரமபத வாசல் திறப்பு விழா வருடம் தோறும் 21 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். முதல் நாள் திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி, அடுத்த பத்து நாட்கள் பகல் பத்து என்றும், அதற்கு அடுத்த பத்து நாட்கள் இராப்பத்து எனவும் உற்சவம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்தாண்டு வைகுண்ட ஏகாதேசி பெருவிழா  கடந்த 19ம் தேதி   திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. அதற்கு அடுத்து பகல் பத்து உற்சவம் கடந்த 20 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது,


திருவாய்மொழி திருநாட்கள் எனப்படும்  பகல்பத்து திருநாளின் 5ம் நாளான இன்று காலை நம்பெருமாள் அர்ஜுன மண்டபத்தில் திருமாலை பிரபந்தம் செவிமடுக்க சௌரிக் கொண்டை சாற்றி, அதில் புஜ கீர்த்தி, இரு வெள்ளை கல் வில்வ பத்ர பதக்கம்; முத்து பட்டை ; முல்லை பூ சரம் சுற்றி, வைர‌அபய ஹஸ்தம் சாற்றி; அதில் தங்க கோலக்கிளி எடுத்து ; கீழே தொங்கல் பதக்கம் ஆட, திருமார்பில் - ஸ்ரீ ரங்க விமான பதக்கம்; கல் இழைத்த ஒட்டியாணம் ; அதன் கீழே சிகப்பு கல் சூர்ய பதக்கம்: அதன் கீழ் வரிசையாக வெள்ளைகல் அடுக்கு பதக்கங்கள்; காசு மாலை; 8 வட முத்து மாலை, "அரைச் சிவந்த ஆடையின் மேல்" என்ற அமலனாதிபிரான் பாசுரத்திற்கு ஏற்ப சிவப்பு நிற பட்டு அணிந்து பின் சேவையாக - சிகப்புக் கல் பதக்கம்; காசு மாலை ; வைரக்கல் ரங்கூன் அட்டிகை அணிந்து சேவை சாத்தித்தார். பக்தர்கள் ரெங்கா ரெங்கா என பக்தி பரவசத்துடன் வணங்கி வழிபட்டு வருகின்றனர். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் நலனுக்கான மிக சிறந்த விரதம் கார்த்திகை விரதம். முருகனை வளர்த்த ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 
temple news
 கோவை: கோட்டைமேடு பகுதியிலுள்ள அகிலாண்டேஸ்வரி உடனமர் கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில், இன்று உலக நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar