குருந்தமலை கோவில் ராஜகோபுரத்தில் 22 அடி உயரம் 7 அடி அகல வேல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24டிச 2025 11:12
கோவை: காரமடை அருகே உள்ள குருந்தமலை, குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில் பக்தர்களால் உபயம் செய்யப்பட்ட 22 அடி உயரம் 7 அடி அகலம் கொண்ட வேல் கோவில் நுழைவாயில் ராஜகோபுரத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ளது.
குருந்தமலை, குழந்தை வேலாயுத சுவாமிகோவில் அகத்தியர், அருந்தவன், ஆதவன் பூஜித்த ஸ்தலம். 800 ஆண்டுகளுக்கு முன் கட்டிய திருக்கோயில். குருந்தமலையில் சித்தர்கள் வாழ்வதாகவும், இத்திருத்தலத்தை சுற்றி 1 மைல் சுற்றளவிற்கு வீடுகள் இல்லை. மதுரை மத்துவராயர் பாலயத்தார் கோயில் மாணியமாக 100 ஏக்கர் பூமி கொடுத்துள்ளனர். இக்கோவிலில் பக்தர்களால் உபயம் செய்யப்பட்ட 22 அடி உயரம் 7 அடி அகலம் கொண்ட வேல் கோவில் நுழைவாயில் ராஜகோபுரத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ளது. இரவு மின்னொளியில் மின்னுகிறது. இந்த புதிய வேல் வைக்கும் நிகழ்ச்சியில் செயல் அலுவலர் வனிதா, அறங்காவலர் குழு தலைவர் மோகனப்பிரியா கணேசன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் திருக்கோவில் ஊழியர்கள் பக்தர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.