ப.வேலூர், சுல்தான்பேட்டையில் எழுந்தருளியுள்ள பகவதியம்மன் கோவிலில் அம்மனுக்கு திருவிழா நடந்து வருகிறது. கடந்த, 3 இரவு நன்செய் இடையாறு ராஜாசுவாமி கோவிலில் இருந்து மணிவேல் எடுத்து வந்து காவிரியிலிருந்து, கரகம் பாலித்து காப்பு கட்டப்பட்டது. 4,5 மற்றும் 6 காலை சுவாமி வேல் எடுத்து ஊர் விளையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று மாலை, பகவதியம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். இன்று மாலை பொங்கல் மாவிளக்கு மற்றும் பகவதியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெறவுள்ளது. இரவு, மஞ்சள் நீராடல் மற்றும் கரகம் காவிரி ஆற்றுக்கு செல்லுதல் நிகழ்ச்சி நடக்கிறது