பதிவு செய்த நாள்
09
ஜன
2020
11:01
ஈரோடு, வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவிலில், நடப்பாண்டு பொங்கல் விழாவையொட்டி, மூன்று நாட்களாக, அலகு குத்தி, அக்னி சட்டி ஏந்தி, தீர்த்தக்குடம் சுமந்து, திரளான ஆண், பெண் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்நிலையில் முக்கிய நிகழ்வான பொங்கல் வைபவம், நேற்று காலை நடந்தது. கோவில் வளாகத்தில், நூற்றுக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படையலிட்டு வழிபட்டனர். விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில், மாரியம்மன் அருள் பாலித்தார். இதேபோல், பொங்கல் விழாவையொட்டி நாராயணவலசு மாரியம்மன், மகா மாரியம்மன் அலங்காரத்திலும், பெரிய வலசு முத்துமாரியம்மன், சிறப்பு அலங்காரத்திலும் அருள் பாலித்தனர்.