பதிவு செய்த நாள்
10
ஜன
2020
11:01
ப.வேலூர்: ப.வேலூர் தாலுகா, கு.அய்யம்பாளையத்தில் மகாமாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. கடந்த, 3ல் திருவிழாவை முன்னிட்டு மகாமாரியம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், விபூதி, திருமஞ்சனம், சந்தனம் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடந்தது. பின்னர், கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. கடந்த, 5ல் வடிசோறு நிகழ்ச்சி நடந்தது. 7ல் நடந்த தீக்குண்டத்தில் ஏராளமான ஆண்களும், பெண்களும் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர், பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். நேற்று மஞ்சள் நீராடல், அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. பிளாஸ்டிக் உபயோகம்