திருநெல்வேலி: திருநெல்வேலி, நெல்லையப்பர் கோயில் தாமிரசபையில் இன்று காலை ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெற்றது.
சிவ பெருமான் திருநடனம் ஆடியதாக 5 சபைகள் போற்றப்படுகின்றன. திருநெல்வேலி, நெல்லையப்பர் கோயில் தாமிரசபை, ராஜவல்லிபுரம் அழகியகூத்தர் கோயில் செப்பறை, குற்றாலம் குற்றாலநாதர் கோயில் சித்திரசபை என 3 சபைகள் இப்பகுதியில் உள்ளன. இந்த கோயில்களில் ஜன.,1ல் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. செப்பறை கோயிலில் நேற்று தேரோட்டம் நடந்தது. இன்று காலை ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.