பதிவு செய்த நாள்
10
ஜன
2020
11:01
மொடக்குறிச்சி: கொடுமுடி அருகே, காரணம் பாளையத்தில் பிரசித்தி பெற்ற பகவதியம்மன் கோவில் உள்ளது. மார்கழி மாதத்தில், பொங்கள் விழா நடக்கிறது. நடப்பாண்டு விழா, கடந்த, 7ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து வடிசோறு மாவிளக்கு, காவிரி தீர்த்தம் எடுத்தல் உள்ளிட்ட நிகழ்வு நடந்தது. முக்கிய நிகழ்வான பொங்கல் மற்றும் பெரும் பூஜையுடன், தீ மிதி விழா நேற்று நடந்தது. திரளான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவில் சுவாமி திருவீதியுலா நடந்தது. மறு பூஜையுடன் பொங்கல் விழா, இன்று நிறைவு பெறுகிறது. விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.
ஓம்காளியம்மன் கோவிலில் ஆப்பக்கூடலில், அந்தியூர் சாலையில், கரட்டுப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற ஓம்காளியம்மன் கோவிலில், நடப்பாண்டு குண்டம் தேர்த்திருவிழா, கடந்த மாதம், 9ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல், நேற்று காலை நடந்தது. தலைமை பூசாரி, முதலில் இறங்கி தொடங்கி வைத்தார். நூற்றுக்கும் மேற்பட்டோர் தீ மிதித்தனர். கரட்டுப்பாளையம், ஆப்பக்கூடல், புதுப்பாளையம், சுக்காநாயக்கனூர், ஓசைபட்டி உள்ளிட்ட பகுதி மக்கள், கலந்து கொண்டனர்.