பதிவு செய்த நாள்
10
ஜன
2020
11:01
திண்டுக்கல்:பழநி பாதயாத்திரை பக்தர்கள் விபத்தை தவிர்க்க, திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சார்பில் இரவில் ஒளிரும் கைப்பட்டைகள், குச்சிகள் வழங்கப்படுகிறது.
ஆன்மிக தலமான பழநி முருகன் கோயிலுக்கு தைப்பூச விழாவுக்கு முன்னதாகவே, மார்கழிப் பிறப்பு முதல் ஏராளமான மதுரை, சிவகங்கை, திருச்சி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட வெளிமாவட்ட பக்தர்கள் பாதயாத்திரையாக வருவது அதிகரித்துள்ளது. அவர்கள் இரவில் ரோட்டோரம் நடந்து செல்லும் போது விபத்து நடக்க வாய்ப்புள்ளது. கடந்த காலங்களில் பக்தர்கள் பலர் பலியாகியுள் ளனர்.
இவ்வாண்டு விபத்தை தவிர்க்க மாவட்ட எஸ்.பி., சக்திவேல் உத்தரவுப்படி பக்தர்கள் அதிகளவில் கூடும் அம்மையநாயக்கனுார், கொடைரோடு டோல்கேட், பழநி பை-பாஸ்ரோடு, மூலசத்திரம், சத்திரப்பட்டி உள்ளிட்ட இடங்களில் 5 ஆயிரம் ஒளிரும் கைப்பட்டை, குச்சிகள் வழங்கப்படுகிறது. அவற்றை பழநி சிவகிரிப்பட்டி பை-பஸ் சந்திப்பில் பக்தர்களிடமிருந்து போலீசார் சேகரிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
பொங்கல் விடுமுறை நாட்களில் மேலும் பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரிக்கும். அப்போது 50ஆயிரம் பேருக்கு ஒளிரும் கைப்பட்டை, குச்சிகள் வழங்க உள்ளதாக போலீசார் கூறினர்.