பரமக்குடி: பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகரசுவாமி(ஈஸ்வரன்)கோயிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி, சிவகாமசுந்தரி சமேதநடராஜ மூர்த்தி ஆனந்த தாண்டவம் ஆடும் நிகழ்ச்சி நடந்தது. இக்கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி, ஜன.1 ல்இரவு 7:00 மணிக்கு திருவெம்பாவை அருளிய மாணிக்கவாசகருக்குகாப்பு கட்டப்பட்டது. அன்று தொடங்கி காலையில் மாணிக்கவாசகர்ஆடிவீதி உலாவும், மாலையில் திருவெம்பாவை பாடப்பட்டு தீபாராதனைநடந்தது. நேற்று இரவு 8:00 மணிக்கு நடராஜமூர்த்தி பச்சை சாத்தி புறப்பாடுஎனப்படும் ஆனந்த தாண்டவ நிகழ்ச்சி நடந்தது. அப்போது கோயில் கொடிமரத்தின் முன்பு விசேஷ தீபாராதனைகள் நடந்தன. தொடர்ந்துஇரவு 3:00 மணிக்கு மேல் அபிேஷகமும், அதிகாலை ஆருத்ரா தரிசனம் நடந்தது.