மதுரை: தினமலர் வாசகர்களுக்காகவும், நாடு செழிக்கவும் மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் இன்று (ஜன.10) காலை 10.00மணிக்கு கோபூஜை நடைபெற்றது.
எங்கெல்லாம் பசுக்கள் துன்பம் இல்லாமல் நிம்மதியாக மூச்சு விட்டு இருக்கிறதோ அங்கு பாவம் நீங்கி நாடு ஒளி பெறும்’. ‘அந்த உயர்ந்த நிலையை உலகம் அடைய கடவுள் அருள் புரியட்டும்’ எனக் காஞ்சிப்பெரியவர் கூறியுள்ளார். இதனடிப்படையில் தான் கோயில்களில் கோபூஜை நடத்தப்படுகிறது. மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் நடைபெற்ற கோபூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, லட்சுமி கடாட்சம், தொழிலில் லாபம், மனபலம், உடல் நலம், தர்ம சிந்தனை, திருமணம், குழந்தைப்பேறு வேண்டி வழிபாடு செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் தினமலர் சார்பாக பிரசாதம் வழங்கப்பட்டது.