பதிவு செய்த நாள்
12
ஜன
2020
04:01
சென்னை; பழநி கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு, பிரதமரை அழைக்க வேண்டும் என, இந்து தமிழர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார், ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திரரெட்டியிடம் அளித்துள்ள மனு:பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு, பிரதமரை அழைக்க வேண்டும். கும்பாபிஷேகத்தை ஒட்டி, சிறப்பு தபால் தலை வெளியிட, மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.பழநி மலைக்கும், இடும்பன் மலைக்கும் இடையில், இணைப்பு பாலம் உருவாக்க வேண்டும். கோவில் சன்னிதான மண்டபத்தின் உள்ளே உள்ள உண்டியல்களை, வெளிப்பிரகாரத்திற்கு மாற்ற வேண்டும்.பாதயாத்திரையாக வந்து, பொது தரிசனத்தில் காத்திருக்கக்கூடிய பக்தர்களுக்கு, பழச்சாறு அல்லது பால் வழங்க வேண்டும்.
ரோப்கார் காத்திருப்பு அறையில், கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும்.கோவில் நிர்வாகத்திற்கு தேவையான ஊழியர்களை, பணி நியமனம் செய்ய வேண்டும். பழநி ஆண்டவர் கலைக்கல்லுாரி கல்வி நிறுவனத்தில், தற்காலிகமாக நியமிக்கப்பட்டு உள்ள ஊழியர்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.