பதிவு செய்த நாள்
12
ஜன
2020
04:01
சென்னை, : வடபழநி முருகன் கோவிலில், அறநிலையத் துறை சார்பில், பாவை விழா போட்டி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.
இளம் தலைமுறையினருக்கு ஆன்மிக சிந்தனையை வளர்க்கும் வகையில், வடபழநி முருகன் கோவிலில், அறநிலையத் துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும், மார்கழி மாதம், பாவை விழா போட்டி நடத்தப்படுகிறது.இந்தாண்டிற்கான பாவை விழா போட்டி, நேற்று நடந்தது.இதில், திருப்பாவை, திருவெம்பாவை பண்ணோடு பாடுதல் மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டன. மூன்றாம் வகுப்பு, முதல், பிளஸ் 2 வரை உள்ள, 100க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர். அவர்களில், சிறந்த முறையில் திறமையை வெளிப்படுத்திய சிறார்களுக்கு பரிசு, சான்றிதழ்களை, கோவில் துணை கமிஷனர் சித்ராதேவி வழங்கி பாராட்டினார்.மேலும், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.