திருமங்கலம்: திருமங்கலம் அருகே அனுப்பபட்டி கரும்பாறை முத்தையா கோயிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழாவில் 10 ஆயிரம் பேருக்கு கறிவிருந்து பரிமாறப்பட்டது.
இக்கோயிலில் பல ஆண்டுகளாக மார்கழியில் இத்திருவிழா நடக்கிறது. நேர்த்திக்கடனாக விடப்பட்ட ஆடுகள் கோயில் வளாகத்தில் வளர்க்கப்பட்டு பலியிடப்படும். ஆடுகள் மேய்ச்சலுக்காக வயல்களுக்கு வரும் போது யாரும் விரட்ட மாட்டார்கள். நேற்று திருவிழாவையொட்டி பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது. நேர்த்திக் கடனாக செலுத்தப்பட்ட 50 ஆடுகள் பலியிடப்பட்டு உணவு சமைக்கப்பட்டன. 50 மூடைகள் அரிசியில் தயாரான சாதம் மலையாக குவித்து வைக்கப்பட்டிருந்தது. விழாவிற்கு வந்த10 ஆயிரம் பேருக்கு கறிவிருந்து பரிமாறப்பட்டது. சாப்பிட்ட இலைகள் எடுக்காமல் அப்படியே விட்டுச் செல்லப்படும். இலைகள் காய்ந்து, மறைந்த பிறகு பெண்கள் கோயிலுக்கு வருவர்.