வரதராஜ பெருமாள் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு அவதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜன 2020 10:01
காஞ்சிபுரம்:வரதராஜ பெருமாள் கோவில் அருகில், பராமரிப்பு இல்லாத கழிப்பறைக்கு செல்ல முடியாமல், பக்தர்கள் சிரமப்படுகின்றனர். இயற்கை உபாதை கழிக்க முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அருகில், பாரம்பரிய நகர மேம்பாட்டு திட்டத்தில், புதிய கழிப்பறை கட்டப்பட்டது.கடந்தாண்டு ஜூலை - ஆகஸ்ட் மாதத்தில் நடந்த அத்தி வரதர் வைபவத்தின்போது, இந்த கழிப்பறை பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.கழிப்பறையை பராமரிக்க, நகராட்சி பணியாளர் நியமிக்கப்பட்டார். அவர், பொதுமக்களிடம் சிறுநீர் கழிக்க ஐந்து ரூபாயும், இயற்றை உபாதைக்கு, 10 ரூபாயும் வசூல் செய்கிறார். ஆனாலும், கழிப்பறையை சுத்தமாக பராமரிப்பதில்லை என, புகார் எழுந்துள்ளது.