பதிவு செய்த நாள்
17
ஜன
2020
11:01
குமாரபாளையம்: குமாரபாளையம், சவுண்டம்மன் கோவில் திருவிழாவையொட்டி நேற்றிரவு மகா ஜோதி திருவீதி உலா நடைபெற்றது. கோவில் வளாகத்தில் தொடங்கிய திருவீதி உலா தம்மண்ணன் சாலை, அக்ரஹாரம், புத்தர் வீதி, சேலம் சாலை, கலைமகள் வீதி, காளியம்மன் கோவில் வீதி, ராஜா வீதி, திருவள்ளுவர் வீதி உள்பட பல பகுதிகள் வழியாக வந்து கோவிலில் நிறைவு பெற்றது. வீரக்குமாரர்கள் கத்தி போட்டவாறும், அம்மன் சரணங்கள் சொல்லியவாறும் பங்கேற்றனர். இன்று காலை மஞ்சள் நீர் மெரவனை, மாலையில், அலங்கார ரதத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற உள்ளது.
குமாரபாளையம் அருகே, பவானி சவுண்டம்மன் கோவில் திருவிழாவில், நேற்றுமுன்தினம் இரவு, செல்லியாண்டியம்மன் கோவில் அருகே காவிரி படித்துறையிலிருந்து சக்தி அழைப்பு வைபவம் நடந்தது. வீரக்குமாரர்கள் கத்தி போட்டவாறு அம்மனை அழைத்து வந்தனர். காவிரி படித்துறையிலிருந்து அக்ரஹாரம், தேர் வீதி வழியாக சக்தி அழைப்பு நடைபெற்றது.