மானாமதுரையில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஏப் 2012 10:04
மானாமதுரை :மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி-சோமநாதர் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.முதல் நாள் மண்டகப்படிதாரர் சீனியப்பா நாடார் குமாரர்கள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படியில் அம்மனும்,சுவாமியும் கற்பக விருஷம்,சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.பின்னர் சுவாமி வீதிஉலா நடைபெற்றது.முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வரும் 2ந் தேதி காலை 11.15 மணியிலிருந்து 11.45 மணிக்குள் நடைபெற உள்ளது. 3ந்தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் கணபதிராமன்,மேலாளர் இளங்கோ, ஸ்தானீகர் அழகிய சுந்தரபட்டர் செய்து வருகின்றனர்.