நுாறாண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலின் கும்பாபிஷேக விழா, இன்று மாலை, 4:00 மணிக்கு, அப்பகுதியிலுள்ள முத்துமாரியம்மன் கோவிலிலிருந்து புனித தீர்த்தங்கள், முளைப்பாலிகை எடுத்து வருவதுடன் துவங்குகிறது.நாளை காலை, 6:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், தொடர்ந்து பாவனா அபிஷேகம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கால வேள்வி, மலர் அர்ச்சனை, பேரொளி வழிபாடுகள், பிரசாதம் வழங்குதல், மூரண்டம்மனை பீடத்தில் வைத்து வெள்ளி மருந்து சாத்துதல் நடக்கின்றன.வரும் 31 அதிகாலை, 5:30 முதல் திருப்பள்ளி எழுச்சி, நான்காம் கால வேள்வி வழிபாடு, திருமுறை விண்ணப்பம், வேண்டுதல் விண்ணப்பம், திருக்குடங்கள் உலா நடக்கின்றன. காலை, 8:00 முதல், 9:00 மணிக்குள் கும்பாபிஷேகம், சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையில், குமரகுருபர சாமிகள் முன்னிலையில் நடக்கிறது.