பதிவு செய்த நாள்
29
ஜன
2020
01:01
வீரபாண்டி: அய்யனாரப்பன் கோவில் கும்பாபி?ஷகத்தை முன்னிட்டு நடந்த தீர்த்தக்குட ஊர்வலத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
சேலம், சித்தர்கோவில் அருகே, ஆரியகவுண்டம்பட்டி, அய்யன்னவளவில், புதிதாக கட்டியுள்ள மகா கணபதி, சப்த கன்னிமார், புடவைக்காரி அம்மன், பூர்ணபுஷ்கலா தேவி சமேத அய்யனாரப்பன், முத்துசாமி, கருப்பண்ண சுவாமி கோவில் கும்பாபி ?ஷக விழா, முகூர்த்த கம்பம் நட்டு, கணபதி பூஜையுடன், நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று காலை, சித்தர்கோவில் சித்தேஸ்வர சுவாமி கோவிலிலிருந்து, திரளான பக்தர்கள், புனிதநீர் நிரப்பிய தீர்த்தக்குடங்களை எடுத்து, மேள, தாளம் முழங்க, ஊர்வலமாக சென்று, கோவிலை அடைந்தனர். இன்று கோபுர கலசம் வைத்தல், மூல விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்து அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை காலை, 9:00 முதல், 10:00 மணிக்குள் கும்பாபி ?ஷகம் நடக்கவுள்ளது. மதியம், பூர்ணபுஷ்கலா தேவிக்கும் அய்யனாரப்பனுக்கும் திருக்கல்யாணம் நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர்மக்கள் செய்துள்ளனர்.
ஓங்காளியம்மன் கோவிலில்...: சங்ககிரி, பெரமச்சிபாளையம், ஓங்காளியம்மன் கோவிலிலுள்ள விநாயகர், மாரியம்மன், ஓங்காளியம்மன் சுவாமிகளுக்கு, நாளை, கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. அதை முன்னிட்டு, நேற்று காலை, ஏராளமான பக்தர்கள், காவேரிப்பட்டி ஆற்றங்கரையிலிருந்து, தீர்த்தக்குடம் எடுத்து, கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். மாலை, பாலிகை அழைத்து வருதல், விநாயகர் பூஜை, வாஸ்துசாந்தி யாக பூஜை நடந்தது. இன்று காலை, இரண்டாம் காலயாக பூஜை ஆரம்பம், கோபுர கலசம் வைத்தல், இரவு, சிலை பிரதிஷ்டை செய்தல் நடக்கிறது. நாளை காலை, 7:30 மணிக்குமேல், யாக பூஜை, தீபாராதனை, கலச புறப்பாடு நடந்து, 9:30 முதல், 10:30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது.
பாலசுப்ரமணியர்...: ஆத்தூர், வெள்ளை விநாயகர் கோவில் வளாகத்தில், அறுபடை பாலசுப்ரமணியர் கோவில் உள்ளது. அதன் மஹா கும்பாபி ?ஷக விழா, நாளை காலை, 9:30 மணிக்கு, வேலூர் பாலமுருகன் அடிகளார் தலைமையில் நடக்கவுள்ளது. நேற்று, யாகசாலை பரிவார ஸ்தாபனம், காப்புக்கட்டுதல், முதல் கால பூஜை நடந்தது. இன்று காலை, இரண்டாம் கால பூஜை, மாலை, மூன்றாம் கால பூஜை நடக்கிறது. நாளை, நான்காம் கால பூஜை, நாடிசந்தானம், மஹாபூர்ணஹூதி, கடங்கள் புறப்பட்டு, விமான கும்பாபி?ஷகம், மூலவருக்கு மகா கும்பாபி?ஷகம் நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, ஹிந்து சமய அறநிலையத்துறையினர், ஆத்தூர் அறுபடை வீடு திருமுருக பக்தர்கள் தெய்வீக பேரவையினர் செய்து வருகின்றனர்.