பதிவு செய்த நாள்
29
ஜன
2020
01:01
திருப்போரூர்: திருப்போரூர் சிதம்பர சுவாமிகளின் சிறப்புகளை எடுத்துரைத்தவர் மவுன சுவாமிகள். கடந்த, 1926ம் ஆண்டு, சதயம் நட்சத்திர நாளில், மடத்தில் ஜோதி வடிவில் மறைந்ததாக கூறப்படுகிறது.தொடர்ந்து, ஆண்டுதோறும் தை சதய நட்சத்திர நாளில், அவருக்கு, குருபூஜை விழா நடத்தப்படுகிறது. அந்த வகையில், நேற்று முன்தினம், குருபூஜை விழா, விமரிசையாக நடந்தது.மடத்தில், மகா அபிஷேகத்துடன், மகேஸ்வர பூஜையும் நடத்தப்பட்டது. விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.