இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த நேரத்தில் நடந்த சம்பவம் இது. லண்டன் நகரத்து மக்கள், விமானங்கள் பொழியும் குண்டு மழைக்கு பயந்து பதுங்கு குழிகளில் ஒளிந்தனர். பெரும்பாலான பெற்றோர் தங்களின் குழந்தைகளை தேவாலயம் ஒன்றில் விட்டனர். பெற்றோரில் பலர் குண்டுக்கு இரையாகி மடிந்தனர். அப்போது அனாதையான குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய கடமை பாதிரியாருக்கு ஏற்பட்டது. பாதிரியாருக்கு தெரிந்த செல்வந்தர்கள் அக்குழந்தைகளை தத்தெடுத்தனர். இந்நிலையில் பாதிரியாரிடம் ஒரு குழந்தை மிஞ்சியது. அக்குழந்தை யாரும் தத்தெடுக்க முன் வரவில்லை. ஏனெனில் அந்த குழந்தை ஒரு நீக்ரோ. பாதிரியார் அப்போது ஒரு தம்பதியிடம் வலுக்கட்டாயமாக தத்துக் கொடுத்தார். அவர்களும் அன்புடன் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அப்போது குழந்தையின் சட்டை பையிலிருந்து ஒரு காகிதம் விழுந்தது. வளர்ப்பு பெற்றோர் பார்த்தபோது அது ஆயிரம் டாலர் கொண்ட காசோலையாக இருந்தது. அதோடு துண்டுச்சீட்டில் ‘‘இது எங்கள் மகனை வளர்ப்பதற்கான செலவுத் தொகை, இதை தாங்கள் அன்புடன் ஏற்க வேண்டும்’’ என குழந்தையின் நிஜமான பெற்றோர் எழுதியிருந்தனர். வாசகத்தை பார்த்த இவர்கள் ஆண்டவருக்கு நன்றி தெரிவித்தனர். இது போல் ஆண்டவர் நமக்கு தேவையானதை கொடுப்பார். அதை வைத்து ஏழைக் குழந்தைகளுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம்.