பதிவு செய்த நாள்
02
பிப்
2020
08:02
தஞ்சாவூர் பெரிய கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பொதுமக்களுக்கு உதவும் வகையில், நம்ம தஞ்சை மொபைல் ஆப் மாவட்ட நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
கும்பாபிஷேக விழா அழைப்பிதழ், நிகழ்ச்சி நிரல்கள், கோவில் பற்றிய செய்திகள், 360 டிகிரி கோணத்தில், கோவிலை பார்வையிடும் வகையில், இந்த மொபைல் ஆப் அமைந்துள்ளது.
விழாவுக்கு அமைக்கப்பட்டுள்ள, தற்காலிக பஸ் நிலையங்கள், சிறப்பு பஸ்கள் இயக்கம், மாவட்ட நிர்வாகத்தில் வழங்கப்படும் அடிப்படை வசதிகள் குறித்தும், ரூட் மேப்புடன் விரிவாக தரப்பட்டுள்ளது. பொதுமக்கள், தங்களது ஸ்மார்ட் போன்களில், ப்ளே ஸ்டோர் வாயிலாக, நம்ம தஞ்சை மொபைல் ஆப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.