பதிவு செய்த நாள்
07
பிப்
2020
11:02
அரூர்: அரூரில், தேவாதியம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும், தை மாதம் கொண்டாடப்படுகிறது. மக்களின் வியாபார மேம்பாடு, குடும்ப நலம், ஊர் நலம், அமைதி, மழை வளம் உள்ளிட்டவைகளை வேண்டி, நடத்தப்படும் இந்த தேவாதியம்மன் திருவிழாவில், ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வர். அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள காமாட்சியம்மன் திருமண மண்டபம் பின்புறம் தேவாதியம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள, ஆவாரம் செடியின் அடியில், நேர்த்திக்கடனாக, 19 ஆட்டு கிடாய்கள் வெட்டப்பட்டன. தொடர்ந்து, நேற்று முன்தினம் அதிகாலை, 3:00 மணிக்கு, 201 ஆட்டு கிடாய்கள் அம்மனுக்கு பலியிடப்பட்டன.