பதிவு செய்த நாள்
11
பிப்
2020
10:02
தர்மபுரி: தைப்பூசத்தையொட்டி, தர்மபுரி குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடந்த, தேர் திருவிழாவில், திரளான பெண்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
தர்மபுரி, குமாரசாமிப்பேட்டையில் உள்ள, சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், தைப்பூச தேர்த்திருவிழாயொட்டி, கடந்த, 4 காலை, 10:30 மணிக்கு கொடியேற்றம், பகல், 1:00 மணிக்கு ஆட்டுகிடா வாகனத்தில், சுவாமி திருவீதி உலா நடந்தது. 5 இரவு, 9:00 மணிக்கு புலி வாகனம், 6 இரவு, 8:00 மணிக்கு பூத வாகனம் ஊர்வலம் நடந்தது. 7ல் நாகவாகன உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு, பால்குடம், பூக்காவடி ஊர்வலம் மற்றும் அலகு குத்துதல் நடந்தது. இரவு, 9:00 மணிக்கு மேல், சுவாமிக்கு திருக்கல்யாணம் மற்றும் பொன்மயில் வாகன உற்சவம் நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று காலை, 9:00 மணிக்கு, விநாயகர் ரத ஊர்வலம் நடந்தது. காலை, 10:00 மணிக்கு, ஏராளமான பெண்கள் மட்டுமே வடம்பிடித்து தேர் இழுத்தனர். இன்று காலை, 9:00 பிச்சாண்டவர் உற்சவம், வேடர்பறி குதிரை வாகனமும், நாளை மறுநாள் பூப்பல்லக்கு உற்சவம், 13ல் சயன உற்சவம் ஆகியவை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் விழா கமிட்டியினர் மற்றும் ஊர்மக்கள் செய்து வருகின்றனர்.