பதிவு செய்த நாள்
11
பிப்
2020
10:02
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த எலத்தகிரி பாறைக்கோவில் திருக்குடும்ப திருத்தலத்தின், 116ம் ஆண்டு பெருவிழா கடந்த, 2ல், சேலம் மறை மாவட்ட ஆயர் சிங்கராயர் தலைமையில் கொடியேற்றம் மற்றும் திருப்பலியுடன் துவங்கியது. தொடர்ந்து தினமும், திருப்பலி நடந்து வந்தது. கடந்த, 9 காலை, தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில், திருநாள் திருப்பலி நடந்தது. அன்றிரவு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஆடம்பர தேர்பவனி நடந்தது. இதில், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டம் மட்டுமின்றி, அண்டைய மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து, ஏராளமானோர் பங்கேற்றனர். இரவு, 10:00 மணிக்கு கந்திகுப்பம் பங்குதந்தையும், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை குருவுமான மதலைமுத்து தலைமையில், வண்ணமிகு வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, நன்றி திருப்பலி கூட்டமும், கொடியிறக்கம் நிகழ்ச்சியும் நடந்தது.