பதிவு செய்த நாள்
11
பிப்
2020
10:02
பழநி : பழநி தைப்பூச விழாவின் இறுதி நிகழ்ச்சியாக பழநி, தேரடி தெப்பக்குளத்தில் தெப்போற்சவம், பெரியநாயகியம்மன்கோயிலில் இன்று (பிப்.11) கொடியிறக்குதல் நடக்கிறது.
பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூச திருவிழா பிப்.,2 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் முத்துக்குமராசுவாமி, வள்ளி, தெய்வானை சமேதமாக பல்வேறு வாகனங்களில் திருவுலா நடந்தது.பிப்.,7ல் திருக்கல்யாணம், பிப்.,8 தைப்பூச தேரோட்டம் நடந்தது.நேற்று( பிப்.,10ல்) பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்றிரவு சுவாமி பெரியதங்கமயில் வாகனத்தில் ரதவீதியில் திருவுலா நடந்தது.
இறுதி நாளான இன்று ( பிப்.,11ல்) இரவு 7:00 மணிக்கு மேல் பெரியநாயகி அம்மன் கோயில் அருகில் உள்ள தேரடி தெப்பக்குளத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ள, தெய்வானை தெப்போற்சவம் நடக்கிறது. அதன்பின் இரவு 11:00 மணிக்கு மேல் கொடி இறக்குதலுடன் தைப்பூசவிழா நிறைவடைகிறது.