ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவில், கொடி இறக்கப்பட்டு, மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடந்தது; இன்று (பிப்.,11) மகா அபிஷேகம் நடக்கிறது.
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், கடந்த, 24ம் தேதி கொடியேற்றத்துடன் குண்டம் திருவிழா துவங்கியது. நேற்று முன்தினம் காலை, குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து, நேற்று காலை, 7:30 மணிக்கு கொடி இறக்கப்பட்டது. காலை, 10:00 மணிக்கு மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடந்தது.கோவிலில் பக்தர்களும், வீதிகளில் மக்களும் மஞ்சள் நீராடி மகிழ்ந்தனர். கோவில் வளாகத்தில் டிராக்டரில் அம்மன் உற்சவர் சிலைக்கு சிறப்பு அலங்கார வழிபாடு நடந்தது. இன்று காலை, 11:30 மணிக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடக்கிறது.