பதிவு செய்த நாள்
11
பிப்
2020
12:02
காஞ்சிபுரம்:தையல் மகம் உற்சவத்தை முன்னிட்டு, யதோக்தகாரி பெருமாள், நாக வாகனத்தில் எழுந்தருளி, பாலாற்றுக்கு சென்று வந்தார்.
காஞ்சிபுரத்தில், சிறப்பு பெற்று விளங்கும் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், நேற்று, தையல் மகம் உற்சவம் நடைபெற்றது.இதை முன்னிட்டு, நேற்று அதிகாலை, யகோக்தகாரி பெருமாள், நாக வாகனத்தில் எழுந்தருளி, நான்கு மாடவீதிகள் வழியாக உதயமாங்குளம், சின்ன அய்யன்குளம் வழியாக பாலாற்றுக்கரை மணி மண்டபம் சென்றார்.அங்கிருந்து, ஓரிக்கை அரசு நகர், அழகிய சிங்கபெருமாள் கோவில் தெரு, விளக்கொளி பெருமாள் கோவில் தெரு வழியாக, மதியம், 1:30 மணிக்கு, மீண்டும் கோவிலை வந்தடைந்தார்.தொடர்ந்து, பெருமாள் மற்றும் திருமழிசை ஆழ்வாருக்கு, கோவிலில் திருமஞ்சனம் நடைபெற்றது. ஆழ்வாருக்கு, சாற்றுமறை செலுத்தப்பட்டது.