பதிவு செய்த நாள்
11
பிப்
2020
04:02
விதியை மதியால் வெல்லும் விருச்சிக ராசி நேயர்களே!
குருபகவான் நற்பலன் கொடுப்பார். சுக்கிரன் பிப்.29 வரையும், புதன் பிப். 21 வரையும், மார்ச் 11க்கு பிறகும் சாதகமான இடத்தில் உள்ளனர். இதனால் பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். பெண்கள் உதவிகரமாக செயல்படுவர். பொன், பொருளில் லாபம் அதிகரிக்கும். மனதில் பக்தி எண்ணம் மேலிடும். குருவால் உங்களின் ஆற்றல் மேம்படும். மந்த நிலை மறையும். மனதில் துணிச்சல் பிறக்கும். வருமானம் கூடும். தேவையான பொருட்களை வாங்கி மகிழலாம். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். முயற்சியில் வெற்றி கிடைக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். கணவர், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை உண்டாகும். சிலரது வீட்டில் பொருள் திருட்டு போகலாம். உறவினர் வகையில் கருத்துவேறுபாடு ஏற்படலாம். சிலர் ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகலாம். தாயை பிரிந்து செல்லும் நிலை வரலாம். நெருப்பு, மின்சாரம் தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
பெண்கள் வாழ்வில் முன்னேற்றம் காண்பர். தேவைகள் பூர்த்தியாகும். தோழிகள் உதவிகரமாக செயல்படுவர். கணவர், குடும்பத்தாரின் மத்தியில் நன்மதிப்பு பெறுவீர்கள். சுபநிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கேற்கலாம். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்ல வாய்ப்புண்டு. வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தைக் காண்பர். தனியார் துறையில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சக ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய பதவியும் சிலருக்கு தேடி வரும். உடல்நிலை சீராக இருக்கும்.
சிறப்பான பலன்கள்
* தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். தங்கம், வெள்ளி, வைரம் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் ஈட்டுவர். ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருட்கள் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல காலகட்டம்.
* தனியார் துறையில் பணிபுரிபவர்கள் வேலையில் திருப்தி காண்பர். வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு, பதவி உயர்வுக்கு தடை இருக்காது.
* ஐ.டி., துறையினருக்கு பணியில் நிலவிய குழப்பத்திற்கு தீர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர்.
* வக்கீல்களுக்கு மார்ச்11க்கு பிறகு எதிர்பாராத வகையில் வருமானம் கிடைக்கும்.
* ஆசிரியர்கள் வேலையில் திருப்தி காண்பர். சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். பகைவர் கூட உங்களின் மேன்மை அறிந்து சரணடையும் நிலை வரலாம்.
* கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். சக கலைஞர்கள் ஆதரவுடன் செயல்படுவர்.
* விவசாயிகள் பாசிப்பயறு, மஞ்சள், கரும்பு, போன்ற பயிர்களில் சிறப்பான மகசூல் கிடைக்கப் பெறுவர். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தடைபடும். வழக்கு, விவகாரங்களில் மெத்தனம் வேண்டாம்
* பள்ளி, கல்லுாரி மாணவர்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர். போட்டியில் வெற்றி பெறுவர். ஆசிரியர்களின் அறிவுரை கைகொடுக்கும். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்க வாய்ப்புண்டு.
சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு அரசு வகையில் சலுகைகள் கிடைப்பது அரிது. அதோடு சிலர் அரசின் மூலம் பிரச்னையைச் சந்திக்கலாம். எனவே வரவு, செலவு கணக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும்.
* வியாபாரிகளுக்கு எதிரி தொல்லை அதிகரிக்கும். சற்று ஒதுங்கி இருக்கவும். பொருட்களை களவு கொடுக்க நேரிடலாம் கவனம்.
* தரகு, கமிஷன் தொழிலில் முயற்சியில் தடைகள் குறுக்கிடலாம்.
* அரசு பணியாளர்கள் வேலையில் பிடிப்பு நிலை இல்லாத நிலைக்கு ஆளாவர். பணிச்சுமையும், வீண் அலைச்சலும் இருக்கும். * போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் அக்கறையுடன் பணியாற்றவும். ஆடம்பரச் செலவு அதிகரிக்கலாம். சிக்கனம் தேவை.
* மருத்துவர்கள் புதிய முயற்சிகளில் தடைகளைச் சந்திக்க வாய்ப்புண்டு.
* அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். செவ்வாயால் எதிரி தொல்லை வரலாம்.
* கலைஞர்களுக்கு பிப்.29க்கு பிறகு முயற்சியில் தடை, மனதில் சோர்வு குறுக்கிடலாம்.
* விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த பலன் கிடைக்காது.
நல்ல நாள்: பிப்.13,16,17,21,22,28,29 மார்ச் 1,2,3,8,9,10,11
கவன நாள்: மார்ச் 4,5 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 3,7 நிறம்: வெள்ளை, மஞ்சள்
பரிகாரம்:
* பவுர்ணமியன்று அம்பிகை தரிசனம்
* சனிக்கிழமையில் அனுமனுக்கு தீபம்
* ஏகாதசியன்று பெருமாளுக்கு அர்ச்சனை