பதிவு செய்த நாள்
11
பிப்
2020
04:02
துணிந்து முடிவு எடுக்கும் துலாம் ராசி நேயர்களே!
செவ்வாய், சனி, கேது மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பர். புதன் பிப்.22 – மார்ச் 11 வரை வக்கிரம் அடைந்து மகர ராசியில் இருப்பதால் நன்மை தருவார். கடவுளின் கருணை உங்களுக்கு கிடைக்கும். எடுத்த முயற்சி வெற்றி பெறும். பொருளாதார வளம் சிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அபார ஆற்றலுடன் செயல்படுவீர்கள். துணிச்சலுடன் பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்வீர்கள். ஆடை, ஆபரணம் வாங்க யோகமுண்டு. வீடு, மனை, வாகனம் வாங்கலாம். கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை உருவாகும். உறவினர் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். மார்ச்11க்கு பிறகு அக்கம் பக்கத்தினர் வகையில் கருத்து வேறுபாடு வரலாம்.
பெண்களுக்கு குருபார்வையால் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். கணவர், குடும்பத்தாரின் நன்மதிப்பை பெறுவீர்கள். புதுமணத் தம்பதியர் குழந்தை பாக்கியம் பெறுவர். மனம் போல ஆடை, ஆபரணம் சேரும். பிறந்த வீட்டில் இருந்து பொருள் வரப் பெறலாம். பணிபுரியும் பெண்களுக்கு புதிய பதவி தேடி வரும். வியாபாரம் செய்யும் பெண்கள் வருமான உயர்வைக் காண்பர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். உடல் நலக்குறைவால் சிரமப்படலாம். உடல்நலனில் அக்கறை தேவை.
சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு லாபம் அமோகமாக இருக்கும். கோயில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் சிறந்து விளங்கும்.
* வியாபாரிகளுக்கு அலைச்சல், பகைவர் தொல்லை குறுக்கிட்டாலும் விடா முயற்சியால் அனுகூலம் காண்பர். குருபார்வையால் பணவரவு கூடும். மார்ச்11க்கு தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம்.
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் நல்ல வளர்ச்சியைக் காண்பர். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
* மருத்துவர்கள் பிப்.22 – மார்ச்11 வரை அதிக வருமானம் கிடைக்கப் பெறுவர். சேமிக்க வாய்ப்புண்டு.
* வக்கீல்கள் எதிர்பாராத நன்மை கிடைக்கப் பெறுவர். அதிகாரம் கொடிகட்டிப் பறக்கும்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேறும் சிலர் பதவி உயர்வு காண்பர். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பணி விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவர்.
* அரசியல்வாதிகள் சிறப்பான பலனைக் காணலாம். எதிர்பார்த்த பதவி பெற வாய்ப்பு இருக்கிறது.
* விவசாயிகளுக்கு பாசிப்பயறு, கொள்ளு, துவரை, மஞ்சள், நெல் போன்ற தானிய வகைகளில் அதிக மகசூல் கிடைக்கும். கால்நடைச் செல்வம் பெருகும். வழக்கு, விவகாரங்களில் முடிவு சாதகமாக அமையும். சொத்து வாங்க காலம் கனிந்து வரும்.
* பள்ளி, கல்லுாரி மாணவர்கள் சிறப்பான நிலையை அடைவர். படிப்பு மட்டுமின்றி விளையாட்டு போட்டிகளிலும் வெற்றி காண்பர். குரு பார்வையால் ஆசிரியர்களின் ஆதரவு பெருகும். சிலருக்கு வெளிநாடு சென்று படிக்க வாய்ப்புண்டாகும்.
சுமாரான பலன்கள்
* தரகு, கமிஷன் தொழிலில் முயற்சியில் தடை ஏற்படும். பொருள் விரயம், நஷ்டம் உருவாகலாம்.
* அரசு வேலையில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் பணியாற்றுவது அவசியம்.
* ஐ.டி., துறையினருக்கு வேலையில் பொறுமையும், நிதானமும் தேவை. அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆனாலும் திறமைக்கு ஏற்ற கவுரவம் கிடைக்கும்
* ஆசிரியர்களுக்கு முயற்சியில் தடை ஏற்படும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காது. எந்த இடையூறு வந்தாலும் அதை குருவின் பார்வையால் ஓரளவு சரி செய்வீர்கள்.
* அரசியல்வாதிகள் எதிலும் கவனமுடன் இருக்கவும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். பண விஷயத்தில் கவனம் தேவை.
* கலைஞர்களுக்கு முயற்சியில் இருந்த தடை, மனச்சோர்வு பிப்.29க்கு பிறகு மறையும். ஆனால் அதன் பிறகு பெண்கள் வகையில் தொல்லை வரலாம்.
நல்ல நாள்: பிப்.14,15,18,19,20,26,27,28,29, மார்ச் 6,7,8,9,12,13
கவன நாள்: மார்ச் 1,2,3 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 2,3 நிறம்: சிவப்பு, பச்சை
பரிகாரம்:
* தினமும் காலையில் சூரிய தரிசனம்
* வியாழனன்று குருபகவான் வழிபாடு
* வெள்ளியன்று மகாலட்சுமிக்கு தீபம்