பதிவு செய்த நாள்
12
பிப்
2020
10:02
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி, பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில், வரும், 13ம் தேதி, சிவராத்திரி பிரம்மோற்சவ விழா துவங்குகிறது.ஊத்துக்கோட்டை அருகே, சுருட்டப்பள்ளி கிராமத்தில் உள்ளது சர்வ மங்களா சமேத பள்ளி கொண்டீஸ்வரர் கோவில்.சிவபெருமான் உருவ ரூபத்தில் காட்சியளிக்கும் இங்கு, வரும், 13ம் தேதி சிவராத்திரி பிரம்மோற்சவ விழா துவங்குகிறது.ஒவ்வொரு நாளும் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம், யாகசாலை பூஜை, கோலாட்டம், பரத நாட்டியம், அன்னமாச்சார்யா கீர்த்தனைகள் மற்றும் உற்சவர் வீதியுலா நடைபெறும்.