பூம்பாறை முருகன் கோவில் தேர் வர்ணம் பூசும் பணி தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13பிப் 2020 11:02
கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே உள்ள பூம்பாறை முருகன் கோவில் விழாவில் தேர் வர்ணம் பூசும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. பழநி முருகன் கோயில் உப கோயிலான பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவில் தேரோட்ட திருவிழா ஆண்டுதோறும் நடப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த 9ம் தேதி கொடியேற்றப்பட்டு பல்வேறு வாகனங்களில் சுவாமி நகர்வலம் வருதல் நடக்கும். பிப்., 17ஆம் தேதி தேரோட்டம் நடக்க உள்ள நிலையில் கோவிலிலுள்ள பிரம்மாண்ட தேர் சீரமைக்கும் பணியை பழநி தேவஸ்தானம் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதையடுத்து தேர் பராமரிப்பு மற்றும் வர்ணம் பூசும் பணியில் ஏராளமான பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் பிரசித்தி பெற்ற இந்த தேர் திருவிழாவை வெளிநாட்டவர் மற்றுமில்லாது ஏராளமானவர்கள் கண்டு ரசிப்பர்.