பரமக்குடியில் பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மே 2012 11:05
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலின் சித்திரைத் திருவிழா நேற்று காப்பு கட்டுடன் துவங்கியது. மே 5, இரவு 2 மணிக்கு பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன், வைகையாற்றில் இறங்கி அருள்பாலிக்கிறார். மறுநாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளும் அழகரை வரவேற்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மே 7ல் தசாவதாரம், மே 8ல் கருடவாகனம், மே 9ல் ராஜாங்க சேவை, மே 10ல் கள்ளழகர் கோலத்துடன் மாலை 5 மணிக்கு கோயிலை சென்றடைகிறார். ஏற்பாடுகளை சுந்தர ராஜப் பெருமாள் கோயில் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.