பதிவு செய்த நாள்
02
மே
2012
11:05
கூடலூர்: மங்கலதேவி கண்ணகி கோயில் விழாவிற்காக பக்தர்களுக்கு வசதிகள் செய்வது குறித்து இரு மாநில அதிகாரிகள் குழு ஆய்வு செய்கின்றனர். கூடலூர் அருகே தமிழக, கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் விழா மே 6ல் நடக்கிறது. இரு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகம் வர வாய்ப்புள்ளதால், கோயிலில் அடிப்படை வசதிகள், பராமரிப்பு பணிகள், ரோடு பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகள் நடைபெறுவது குறித்து, தமிழக அரசு சார்பில் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ.,கண்ணன், தாசில்தார் ஜவகர் பாண்டியன், மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை தலைவர் தமிழாதன், செயலாளர் ராஜகணேஷ், பொருளாளர் முருகன், கேரள அரசு சார்பில் பீர்மேடு ஆர்.டி.ஓ., வெங்கடேஷ், தாசில்தார் சானவாஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு நடத்துவதற்காக கண்ணகி கோயிலுக்கு சென்றனர். குமுளியில் இருந்து கோயில் வரை செல்லும் வனப்பகுதி, முதன்முறையாக ஜே.சி.பி. இயந்திரம் மூலம் சீரமைக்கப்படுகிறது. குடிநீர் வசதி ஏற்படுத்த இடம் தேர்வு செய்யப்பட்டது.