உசிலம்பட்டி மகாசிவராத்திரியை முன்னிட்டு உசிலம்பட்டி பகுதியில் குலதெய்வ கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகிறது. கருமாத்தூர்,பாப்பாபட்டி, நாட்டாமங்கலம், வாலாந்தூர், செக்கானூரணி உள்ளிட்ட கிராம கோவில்களில் இரவு விடிய விடிய குலதெய்வ வழிபாடு நடந்தது. ஆனையூர் மீனாட்சி அம்மன் சமேத ஐராவதேஸ்வரர் கோயில், திடியன் பெரியநாயகி சமேத கைலாசநாதர் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயில் மாசிப்பச்சை திருவிழாவிற்காக உசிலம்பட்டி சின்ன கருப்பசாமி கோயிலில் உள்ள அம்மனின் ஆபரணங்கள் அடங்கிய பெட்டிகள் நேற்று கோயிலுக்கு எடுத்துச்செல்லப்பட்டன.