செஞ்சி: திருவம்பட்டு முத்து மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா 4ம் தேதி நடக்கிறது. செஞ்சி தாலுகா திருவம்பட்டு முத்து மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து வருகின்றனர்.நாளை மாலை 7 மணிக்கு தீமிதி விழாவும், தொடர்ந்து இரவு 10 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், சாமி வீதியுலாவும் நடக்கிறது. முக்கிய விழாவான திருத்தேர் வடம் பிடித்தல் வரும் 4ம் தேதி மாலை 4 மணிக்கு நடக்க உள்ளது.