பாஞ்சாலங்குறிச்சி முத்துமாரியம்மன் கோயில் கொடைவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மே 2012 11:05
ஓட்டப்பிடாரம்: பாஞ்சாலங்குறிச்சி சிலோன்காலனி முத்துமாரியம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து பூக்குழி இறங்கி வழிபாடு செய்தனர். பாஞ்சாலங்குறிச்சி சிலோன்காலனி முத்துமாரியம்மன், செல்வவிநாயகர், முருகன், கருப்பசாமி கோயில் சித்திரை திருவிழா நடந்தது. இதனை முன்னிட்டு ஓட்டப்பிடாரம் தெப்பகுளம் விநாயகர் கோயிலில் கரகம்பாலித்தல் நிகழ்ச்சி நடந்தது. காலை பெண்கள் அம்மனுக்கு பொங்கலிட்டனர். பின்னர் ஓட்டப்பிடாரம் தெப்பகுளம் விநாயகர் ஆலயத்தில் இருந்து பக்தர்கள் பால்குடமும், கோயில்களில் விசேஷ பூஜைகளும் நடந்தது. மதியம் அன்னதானம் நிகழ்ச்சியும், தொடர்ந்து ஓட்டப்பிடாரம் தெப்பக்குளம் விநாயகர் கோயிலில் இருந்து பக்தர்கள் பறவைக்காவடி மற்றும் காவடி எடுத்து அம்மனின் ஆலயத்திற்கு எடுத்துச் சென்று பூக்குழி இறங்கும் வைபவம் நடந்தது. மாலை மாவிளக்கு பூஜையும், இரவு கருப்பசாமி கோயிலில் சாமக்கொடையும், பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சியும் நடந்தது.